மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு வாணிபக் கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாராளுமன்ற தேர்தலுக்கு கூடுதலாக வரப்பெற்றுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட  தேர்தல் அலுவலரான ஏ பி மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) செல்வம் மற்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் இருந்தனர்.