விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி  விழுப்புரத்தில்  நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்த நிலையில், அக்கூட்டத்தில் புகழேந்தி கலந்து கொண்டார்.

அப்போது திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் அவரை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.