மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின் கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடிநீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் பிரதான குழாய்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 21.03.2024 மற்றும் 22.03.2024 ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது எனவே மயிலாடுதுறை நகர பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் அறிவிப்பு விடுத்துள்ளார்.