தமிழ்நாட்டில்  நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் . வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு  ஆகிய சோதனைகளை  தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. 

அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16ந் தேதியில் இருந்து இன்று வரை ரூ.192.67 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.