தமிழ்நாட்டின் மிக தொன்மையான ஆதீன மடங்களில் தருமபுரம் ஆதீனம் மிக முக்கியமானதாகும். இந்த மடத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2024 பாராளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வெள்ளி செங்கோலை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்து ஆசி கூறியுள்ளார் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்.