இறைவன்: உத்தவேதீஸ்வரர், வீங்குநீர் துருத்தி உடையார்
இறைவி: அரும்பன்னவளைமுலை அம்மன்
தீர்த்தம்: வடக்குளம், காவிரி
பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தேவாரம்:
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்தும் கும்பகோணத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம் 609301.
தொலைபேசி:
கே. ராஜசேகரகுருக்கள்: 04364 – 235225, 9487883800