தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே10) காலை 9.30 மணிக்கு வெளியான நிலையில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் கூடுதலாகும்.

மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடவாரியாக,

தமிழ் –  8

ஆங்கிலம் –  415

கணிதம் –  20,691 

அறிவியல்  –  5,104

சமூக அறிவியல்  –  4.,428 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.

கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து முதல் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன.

குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.