தமிழ்நாட்டில்  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்கத் தகுதி உடைய புதிய வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

 

அதன்படி மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேர் ஆண்கள்; 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர் பெண்கள்; 8,467 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

 

முதல்முறை வாக்காளர்களின் (18 முதல் 19 வயது வரை) எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420. அவர்களில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 153 பேர் ஆண்கள். 5 லட்சத்து 7 ஆயிரத்து 113 பேர் பெண்கள். 154 பேர் மூன்றாம் பாலினத்தவர்.