Ghibili Art – ஜிப்லி ஸ்டைலில் புகைப்படம் மாற்றுவது – சைபர் மோசடி அபாயம் எச்சரிக்கை!

சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், சாதாரண புகைப்படங்களை ஜிப்லி எனப்படும் கார்டூன் கலையில் மாற்றும் மென்பொருட்கள் பெரிதும் பரவி வருகின்றன. இதன் அழகான தோற்றம் மற்றும் வித்தியாசமான வெளிப்பாடுகள் காரணமாக, பலரும் இந்த ஜிப்லி ஸ்டைல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த புதுமையான முயற்சிக்கு மக்களிடம் உற்சாகம் இருந்தாலும், அதன் பின்னால் சில ஆபத்துகள் இருப்பதாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இந்த வசதிகளை பயன்படுத்தும் போது, பயனர்கள் தங்களின் தனிப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை – முகம், கண் வடிவம், தோல் நிறம் போன்றவை – இயற்கையாகவே AI செயலிகளிடம் வழங்குகிறார்கள்.

இவை முற்றிலும் பாதுகாப்பானதல்ல என்பதை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஒருமுறை அந்த தரவுகள் வெளியேறினால், பயனர்கள் அதை அகற்ற முடியாது என்றும், சில நிறுவனங்கள் அந்த தரவுகளை விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த புகைப்படங்களை மாற்றும் இணையதளங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. சில தளங்கள் தவறான லிங்க்கள் மற்றும் மோசடி முயற்சிகளை பயன்படுத்தி, பயனர்களின் தரவுகளை திருடும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, அறிவில்லாமல் வந்த ஜிப்லி தொடர்பான இணையதளங்களின் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தோன்றினால், தாமதிக்காமல் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் புகார் செய்யுமாறு சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.