சென்னையின் அருகேயுள்ள காட்டாங்கொளத்தூர் SRM பல்கலைக்கழகத்தில் நடந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” குறித்து நடைபெற்ற கருத்தரங்கில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதில், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை புதிதல்ல என்றும், இது இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் பார்வையில் வேறுபாடுகள் இருந்தாலும், கண்மூடி எதிர்ப்பு காட்டாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலை இது எனவும் அவர் வலியுறுத்தினார்.
முக்கியமாக, 2029ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகே ஜனாதிபதி இந்த திட்டத்தை முன்னெடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.