வருங்கால வைப்பு நிதி என்பது அரசு மற்றும் தனியார் துறையிலுள்ள ஊழியர்களுக்கு முக்கியமான ஓய்வு சேமிப்பு திட்டம் ஆகும். இப்போது இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
PF என்றால் என்ன?
ஊழியரும், அவருடைய நிறுவனம் வழியாகவும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் சம்பளத்தில் இருந்து தொகை கழிக்கப்பட்டு சேமிக்கப்படும் திட்டமே PF (Provident Fund).
இது ஒரு ஓய்வுக்கால நிதி திட்டமாகும் மற்றும் அவசர தேவைகளில் சில சந்தர்ப்பங்களில் பணத்தை பரிமாற்றம் செய்துகொள்ளவும் அனுமதி உள்ளது.
💰 ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் 12% பங்காக PF-க்காக செலுத்தப்படுகிறது.
ஊழியர் தன்னுடைய சம்பளத்திலிருந்து 12% EPF-க்கு செலுத்துவார்.
நிறுவனத்தின் பங்களிப்பு: 8.33% EPS (Employee Pension Scheme) + 3.67% EPF.
குறிப்பு: EPS பங்கு அதிகபட்சம் மாதம் ₹1,250 ஆகும், ஏனெனில் அரசு நிர்ணயித்த அடிப்படை சம்பளம் ₹15,000 ஆகவே கணக்கிடப்படுகிறது.
✅ 8.33% of ₹15,000 = ₹1,250 (மிக உயர்ந்த பங்களிப்பு எல்லை).
PF-ன் பயன்கள் என்ன?
ஓய்வு பெற்ற பின், வாழ்க்கையை நிதி சிக்கலின்றி நடத்த உதவுகிறது.
Section 80C பிரிவின் கீழ் வரி விலக்காக பயன்படுத்தலாம்.
👴 58 வயதுக்கு பிறகு EPF-இல் உள்ள முழு தொகையையும் திரும்ப பெற முடியும்.
EPS-இல் பங்களிப்பு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், தொகையை முழுமையாக திரும்பப் பெறலாம்.
10 ஆண்டுகள் கடந்தால், EPS-ஐ மாத ஓய்வூதியமாக மட்டுமே பெற முடியும்.
கல்வி, திருமணம், வீடு வாங்குதல், மருத்துவ செலவுகள் போன்ற தேவைகளுக்காக இடைக்காலப் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
வேலை இழந்த பிறகு 1 மாதத்துக்குப் பிறகு 75%, 2 மாதங்களுக்கு பின் முழுதும் பெற முடியும்.
PF திட்டம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதுகாப்பான முதலீடு (Risk-Free).
வேறு வேலைக்கு சென்றால், PF கணக்கை புதிய நிறுவனத்துடன் இணைக்கலாம்.
நேரடி சம்பளத்தில் இருந்து பங்களிப்பு ஆகுவதால் தானாக சேமிப்பு கையாளப்படுகிறது.
PF வட்டி விகிதம் எப்படி இருக்கும்?
PF கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி வீதம் மத்திய அரசால் வருடந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. இது வருடத்திற்கு மாறுபடக்கூடியது. கடந்த சில ஆண்டுகளில் இது 7.9% – 8.9% ஆக இருந்துள்ளது.
அடிப்படை சம்பளம் ஏன் முக்கியம்?
💰 ஊதியம் அதிகமாக இருந்தாலும், அடிப்படை சம்பளம் குறைவாக இருந்தால் PF பங்களிப்பு குறைவாகவே இருக்கும்.
அடிப்படை ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு உத்தரவிட்டதால், தற்போது ஊழியர்களின் PF தொகை அதிகரித்துள்ளது.
PF தொகை குறைவாக இருப்பதற்கான காரணம் பெரும்பாலும் அடிப்படை சம்பளத்தின் குறைவுதான்!
EPF vs VPF – முக்கிய வேறுபாடுகள்:
VPF (Voluntary Provident Fund) என்பது EPF போலவே ஒரு திட்டம்.
ஊழியர் விருப்பப்படி 12%க்கும் மேலாக கூடுதல் தொகையை செலுத்தலாம். ஆனால் நிறுவனம் அதற்காக பங்களிக்க வேண்டியதில்லை.
📈 ஷேர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள், பாதுகாப்பான முதலீட்டிற்காக VPF-ஐ தேர்வு செய்யலாம்.
VPF க்கும் EPF க்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதம் கிடைக்கும் – மத்திய அரசு நிர்ணயிக்கும் வட்டி.
FD மற்றும் PPF வட்டி வீதங்களை விட அதிகமான வருமானம் PF-ல் கிடைக்கும்.
ஓய்வு பெறும் நேரத்தில் பெரிய தொகையாக வந்து, இறுதி வாழ்க்கையை நிதி சிக்கலின்றி நடத்த உதவுகிறது.
குறிப்பு: 5 ஆண்டுக்கு முன் PF தொகையை (EPF + VPF) முழுமையாக எடுத்தால், அதன் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
✅ ஷேர், மியூச்சுவல் ஃபண்டில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து முதலீடு செய்யலாம்; ஆனால் அதில் அல்பமாக இருந்தாலும் RISK இருக்கும். ஆனால் நீண்ட காலத்தில் 11% – 15% வரையான லாபம் கிடைக்கும்.
📌 உங்கள் PF அனுபவங்களை கீழே கருத்தில் பகிருங்கள்!
🟢 இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் – அவர்களுக்கும் பயனளிக்கும்!
