மயிலாடுதுறையில் மின் நிறுத்தம் அறிவிப்பு

மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர். ஆனதாண்டவபுரம், வழுவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

Play Video