திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை எண்.(4D) 35, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 18.08.2023 வெளியிடப்பட்டது.
அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்கு “பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி” என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Top News
-
மயிலாடுதுறை கடலில் புதிய எண்ணெய் கிணறுகள் திட்டம்: “தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது!” – வேல்முருகன் வலியுறுத்தல்
-
மயிலாடுதுறை கடலோரத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டம்: அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
-
மயிலாடுதுறை: பள்ளியில் கழிப்பறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள் – அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை!
-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
-
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?


