மேஷம்
பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி உதவி செய்வதால் சந்தோஷம் அடைவீர்கள். சக தொழிலாளர்களிடமும் நட்பை வளர்த்து சாதகம் பெறுவீர்கள். மாமனார் வீட்டில் இருந்த மனத்தாங்கலை புத்திசாலித்தனத்தால் அகற்றுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
ரிஷபம்
உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் போடும் திட்டத்தை முறியடிப்பீர்கள். அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள். நெருங்கிய உறவினருக்கு பண உதவி செய்வீர்கள். உடன்பிறப்புகளால் தொல்லைகளை சந்திப்பீர்கள்.வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் வைத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
மிதுனம்
தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். கொடுத்த கடனை திருப்பி கேட்பதில் மனத்தாங்கல் அடைவீர்கள். மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேட்பீர்கள். அரசாங்க பைல்களில் கையெழுத்திடும் போது அலட்சியம் காட்டாதீர்கள். .வேலை ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலில் இலக்கை அடைய சிரமப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3
கடகம்
ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5
சிம்மம்
சிக்கலான வேலையை முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பெட்டிக்கடை வியாபாரிகள் முதலுக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். நண்பர்களோடு உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6
கன்னி
வியாபாரத்தில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். தொழிலுக்காக தேவைப்பட்ட பணம் கைக்கு வந்து சேர்ந்து உற்சாகமடைவீர்கள். கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பீர்கள். இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் புகழையும் அந்தஸ்தையும் உயர்த்துவீர்கள். கேலியாக பேசி வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
துலாம்
அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவீர்கள். தந்தையார் மூலம் பணவரவு பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் எண்ணத்திற்கு விதை போடுவீர்கள். கடன் பிரச்சினைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
விருச்சிகம்
வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை இன்று போடாதீர்கள். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி தாமதமாவதால் சங்கட்டப்படுவீர்கள். கடன் பிரச்சனையால் தலை குனிவு அடைவீர்கள்.சகோதரியால் தொல்லை வந்து வேதனைப்படுவீர்கள். சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
தனுசு
துவண்டு கிடந்த தொழிலைத் தூக்கி நிறுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலை செய்வீர்கள். சிறு வியாபாரிகள் சீரான லாபத்தைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனை கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள். இரும்புத் தொழில் செய்பவர்கள் எதிர்பாராத ஏற்றம் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1
மகரம்
வேலைப்பளு அதிகரிப்பதால் மூச்சு விட முடியாமல் திணறுவீர்கள். கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள். உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். சிறிய வியாபாரிகள் கடன் கொடுப்பதில் கண்டிப்புக் காட்டுவீர்கள். காய்கறி வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வெளியூரிலிருந்து வந்த நல்ல செய்தியால் குதூகலம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
கும்பம்
பூர்வீகச் சொத்துக்களை விற்க முடியாமல் சங்கடப்படுவீர்கள். குழந்தைப் பாக்கியம் இல்லை என்று தவிக்கும் குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்பட்டு மன நிம்மதி அடைவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்களுக்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை முனை மழுங்க செய்வீர்கள். வேலை இடத்தில் நல்ல பெயரைச் சம்பாதிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
மீனம்
சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடி போவீர்கள். தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதால் கடன் வாங்குவீர்கள். தோப்பு குத்தகை மூலம் வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமாக நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் அமோகமான லாபம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5