வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது