இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க அடையாள சான்றாக உபயோகப்படுத்துக்  கூடிய ஆவணங்களாக கீழ்கண்ட 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ,

1. வாக்காளர் அடையாள அட்டை 

2. இந்திய  கடவுச் சீட்டு (Passport),

3.ஓட்டுநர் உரிமம்,

4.பணியாளர் அடையாள அட்டை அட்டை (மத்திய/மாநில அரசுகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ,

5. சேமிப்பு கணக்குப் புத்தகங்கள் (வாங்கி/அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

6.வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (Pancard),

7.ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

8.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை 

9.மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் னால அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது)

10.ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது )

11. அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்றத் பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)

12. ஆதார் அட்டை, 

13. மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால்  வழங்கப்பட்டது)

ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

மேலும் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும், வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது. எனவே வாக்காளர்கள் மேற்குறிப்பிட்ட 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால் மட்டுமே வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி தெரிவித்துள்ளார்.