நாடாளுமன்ற தேர்தல்  வருகிற  ஏப்ரல் -19 ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும்  டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி உத்தரவினை மீறி செயல்பட்டால் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.