இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 5 – 2024 வியாழக்கிழமை

மேஷம்
எதிர்ப்புகளை தாண்டி தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தை நண்பர்கள் மூலமாக விருத்தி செய்வீர்கள். கழுத்து வலியால் துன்பப்பட்ட தகப்பனாருக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். தாயார் கேட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களில் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை கணிசமாக பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்
அலட்சியமாக பயணம் மேற்கொண்டால் கைப் பொருளை இழப்பீர்கள். வியாபாரம் சுணக்கமாக நடப்பதால் மனக்கவலைப்படுவீர்கள். உரிய காலத்தில் கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீர்கள். புரிந்து கொள்ளாமல் பேசும் காதலியின் நடவடிக்கையால் மனம் புண்படுவீர்கள். அடிக்கடி தொந்தரவு தரும் சைனஸ் பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்
இருசக்கர வாகனத்தில் இரவு நேர பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். வியாபாரம் சம்பந்தமாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். நெருக்கமாக இருந்த நண்பரே போட்டியாக வருவதால் மன வேதனைப்படுவீர்கள். தாய் மாமன் சீர் செய்ய கடன் வாங்குவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் அவமானத்தை சுமப்பீர்கள். வாகனத்தில் பழுது ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்
எண்ணிய காரியங்களை எளிதில் நிறைவேற்றுவீர்கள். மங்கல நிகழ்ச்சியால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள். வயதான பெற்றோர்களால் வாயாரப் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் மனம் குளிர்ந்து போவீர்கள். வியாபாரப் பிரச்சனைகளை சுலபமாக முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவால் அலைச்சலை குறைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்
ஆடல் பாடல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக நாட்டத்துடன் கலந்து கொள்வீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாவீர்கள். ஆனால் உங்களின் விடாமுயற்சியால் தொழிலில் வெற்றியைக் காண்பீர்கள். உற்சாகத்துடன் புதிய தொழில்களில் தடம் பதிப்பீர்கள். சிறு வியாபாரிகள் சிறப்பான லாபம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி
அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவியில் அமர்வீர்கள். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழிலை ஏற்றம் காணச் செய்வீர்கள். உங்கள் பேச்சுத்திறனால் மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். பிரிந்து இருந்த இருந்த கணவன் மனைவியைச் சேர்த்து வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்
எதிரிகளின் சூழ்ச்சியை இறுமாப்போடு முறியடிப்பீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து அனைவரையும் பூரிக்க வைப்பீர்கள். அக்கறையுடன் வேலைசெய்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நிலம் வாங்க அட்வான்ஸ் பணம் கொடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்
உங்கள் முயற்சிகள் முளைவிட்டு மரமாகி நல்ல கனிகள் கொடுப்பதை பார்த்து களிப்படைவீர்கள். வியாபாரத்திற்காக பணம் புரட்டுவீர்கள். ஓடி வந்து உதவி செய்யும் நண்பர்களை மறக்காதீர்கள். விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அரசியல்வாதிகளின் அன்பைப் பெறுவீர்கள். எங்கு சென்றாலும் புகழும் செல்வாக்கும் பெறுவீர்கள். தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு
அனாவசியச் செலவுகளால் அவதிப்படுவீர்கள். உதவி செய்வதன் மூலம் உங்கள் மரியாதையை உயர்த்திக் கொள்வீர்கள். இந்த நாளில் போட்டி பந்தயங்களில் இறங்காதீர்கள். பங்குச் சந்தை சரிவால் சங்கடப்படுவீர்கள். உறவினர்களால் பல நன்மைகள் அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பான பலனை பெறுவீர்கள். மனை இடம் வாங்கி போடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்
நண்பரின் ஒத்துழைப்பால் ஓரளவு நன்மையை அனுபவிப்பீர்கள். உடல்ரீதியான உபாதைகளை எதிர்நோக்குவீர்கள். மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள். பெற்றோர்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கொடுத்த இடத்தில் குறித்த நேரத்தில் பணம் திரும்பி வராமல் திணறுவீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக்கொண்டால் அவமானத்தை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்
மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். விழிப்போடு வாகனம் ஓட்டவில்லை என்றால் விபத்தில் சிக்குவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். வியாபாரத்தில் போட்டியை எதிர்நோக்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பை அடைவீர்கள். வெளியூர்க் கடிதங்கள் மூலம் நல்ல செய்தியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வருமானம் பெறுவீர்கள். வெளிநாட்டு நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விஸ்தரிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமையை நீக்கி உறவை பலப்படுத்துவீர்கள். பிள்ளைகள் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான முன்னெடுப்புகளை செய்வீர்கள். பொருளாதாரத்தை பெருக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5