18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 19, 26, இந்த மாதம் (மே) 7, 13-ந்தேதிகளில் முதல் 4 கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் 4 கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் உத்தரபிரதேசத்தில் (14), மகாராஷ்டிராவில் ( 13 ), மேற்கு வங்காளத்தில் ( 7 ), பீகாா் ( 5 ), ஒடிசா( 5 ), ஜார்க்கண்டில் ( 3 ),ஜம்மு-காஷ்மீா் ( 1 ) மற்றும் லடாக் ( 1 ) உட்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது .
அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது.