இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 10 – 2025 வெள்ளிக்கிழமை

மேஷம்
நினைத்த காரியங்களை தடை இன்றி நடத்தி மள மளவென்று பொருளாதாரத்தை பெருக்குவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் கொடியை பறக்க விட்டு செல்வாக்கை காட்டுவீர்கள். கனவில் காதலித்த பெண்ணை நனவில் கை பிடித்து சந்தோச நடை போடுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகளை நீக்குவீர்கள். பெரிய மனிதரின் சந்திப்பால் அரிய காரியங்கள் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1 Also

ரிஷபம்
கண் காது போன்ற உறுப்புகளில் நோய் தொந்தரவு ஏற்பட்டு மருத்துவச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் சரிவுகளை சந்திப்பீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். பெண்கள் மேல் ஆசைப்பட்டு பிரச்சனைகளை சந்திக்காதீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் தன்மூப்பாக திரிந்து பிரச்சனையில் சிக்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்
அலட்சியமான போக்கால் சிலர் அரசாங்க வேலையை இழப்பீர்கள். தூர தேச பயணங்களளில் துன்பத்தை அனுபவிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதில் அவசரம் காட்டாதீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கை இழப்பீர்கள். பிள்ளைகள் பெரிய பிரச்சனையை கொண்டு வருவார்கள். வெளியூரில் வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்
புதிய தொழிலில் அதிக லாபம் பார்ப்பீர்கள். மக்கள் பணி செய்து அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பொருளாதாரத்தை குவிக்க புதுப்புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தங்க வளையல் வாங்கி கொடுத்து விரும்பிய பெண்ணை மடக்குவீர்கள். உங்களை முடக்கி போட்ட மூட்டு வலி பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்
உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் மனைவி சந்தோஷ பூக்களை தூஙவுவதால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வியாபாரத்தில் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். உடலை வருத்தும் சின்ன சின்ன நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். காதல் பெண்ணின் கடைக்கண் பார்வையால் கணினி துறையில் உச்சம் தொடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி
கவனக்குறைவாக இருந்தால் வீட்டில் பணம் களவு போகும் நிலைக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி பொருள் இழப்பை சந்திப்பீர்கள். கொடுத்த கடனை திருப்பி அடைக்க முடியாமல் மரியாதை குறைவு ஏற்பட்டு மனம் வருந்துவீர்கள். பிள்ளைகளின் பிரச்சனையால் வீட்டில் நிம்மதி குறைந்து காணப்படுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்
விதண்டாவாதமாக பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்கள். அடகு வைத்த நகையை மனைவிக்கு மீட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் மந்தமான நிலையை காண்பீர்கள். வெளியூர் பயணங்களில் வீண் செலவு செய்வீர்கள். வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கை காலில் அடிபடுவீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்
எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகி திருப்தி அடைவீர்கள். வியாபாரத்தில் கிடுகிடு லாபம் பார்ப்பீர்கள். பொறுப்பாக நடந்து உறவினர்கள் மத்தியில் மரியாதையை உயர்த்தி கொள்வீர்கள். வசீகரமான பேச்சால் இளம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள். தந்தையாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு
தொழிலை வெகு சிறப்பாக நடத்தி பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். சின்ன சின்ன தொல்லைகளால் பாதிக்கப்படுவீர்கள். எதிரிகள் உண்டாக்கும் இடையூறுகளைத் தாண்டி வருவீர்கள். அறிமுகம் இல்லாத பெண்களிடம் அதிக நெருக்கம் காட்டாதீர்கள். தொண்டையில் புண் ஏற்பட்டு அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்
பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராமல் புரள்வீர்கள். புதுப்புது சிக்கல்கள் தோன்றி பொருளாதார பாதிப்பு அடைவீர்கள். மற்றவர்கள் மத்தியில் மரியாதை குறைந்து மனம் சங்கட்டப்படுவீர்கள். காதல் விவகாரங்களில் பின்னடைவு ஏற்பட்டு வருந்துவீர்கள். பிள்ளைகளால் பெரும் தொல்லைகளை சந்திப்பீர்கள். கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீர்கள்
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்
பிள்ளைகளின் வெற்றியால் பெருமிதம் அடைவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அனுகூலமான பயனை பெறுவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். கையில் கணிசமாக காசு புரளவதால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெருவாரியாக செலவு செய்து பெண்கள் மனசை கொள்ளை அடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்
கணவன் மனைவி உறவை கல்கண்டாய் இனிக்க செய்வீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வணிகத்தில் ஈடுபடும் நீங்கள் வலுவான லாபத்தை அடைவீர்கள். கலகலப்பாக பேசி காதலியின் கவலையை போக்குவீர்கள். வெளிநாட்டில் கடுமையாக உழைத்து வீட்டிற்கு பணம் அனுப்புவீர்கள். மனதை வாட்டிய நோய்ப் பயத்திலிருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5