மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா ஒரு ஆய்வாளர் வீதம் மூன்று ஆய்வாளர்கள்  தேர்தல் பொறுப்பு பணி நியமிக்கப்பட்டும்,  மேலும் மூன்று சட்டமன்ற தொகுதிகளை கள ஆய்வு செய்த 85 Sector Police officers மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்கு 44 QRT Team நியமிக்கபட்டும், அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் இன்று 16.04.2024ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஜெயக்குமார்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(Head Quarter), சிவசங்கர் கூடுதல் காவல்  கண்காணிப்பாளர்(CCW), திருப்பதி துணைக்காவல்  கண்காணிப்பாளர், மயிலாடுதுறை உட்கோட்டம் ராஜ்குமார் துணைக்காவல்  கண்காணிப்பாளர், சீர்காழி உட்கோட்டம் மனோகரன் துணைக்காவல்  கண்காணிப்பாளர், மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் (பொறுப்பு), தேர்தல் கட்டுப்பாட்டு அறை , மயிலாடுதுறை T.A.J லாமெக்  துணைக்காவல்  கண்காணிப்பாளர் , மதுவிலக்கு அமல்பிரிவு மயிலாடுதுறை பன்னீர்செல்வம் துணைக்காவல்  கண்காணிப்பாளர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மயிலாடுதுறை பாலச்சந்திரன், ஆய்வாளர், மாவட்ட தனிப்பிரிவு மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மேற்கண்ட  Sector Police officers ஆகியோருக்கு வாக்குபதிவிற்கு 72, 48, 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு பற்றி விளக்கப்பட்டது. தேர்தல் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அனைத்தியான முறையில் நடைபெறுவதற்கு வலியுறுத்தப்பட்டது