மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் தபால் வாக்கு பணிகளை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துவடிவேல் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.