கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியும்.

இருப்பினும், ‘ஜியோ ஃபென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலையில், ஜியோ ஃபென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும் என  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.