மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட பழையபாளையம் ஊராட்சியில் இயங்கிவரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர்  உந்து நிலையத்தின் செயல்பாடுகளை நேற்று மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)மு.ஷபீர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.