நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு  12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்.26) நடைபெற்றது. இதில், 63.50 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக திரிபுராவில் 78.53 சதவீதம், மணிப்பூரில் 77.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 73.55 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 71.91 சதவீதம், ராஜஸ்தான் 64.07 சதவீதம், மேற்கு வங்கம் 71.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 65.78 சதவீதம், கர்நாடகா 68.26 சதவீதம், அசாம் 71.11 சதவீதம், மகாராஷ்டிரா 56.63 சதவீதம், மத்திய பிரதேசம் 57.76 சதவீதம், பிஹார் 55.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்த பட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85 சதவீதம், வாக்குகள் பதிவாகியுள்ளனஎன தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.