கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராம வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து 4-வது நாளாக காட்டுத்தீ பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் பகுதிகளில் தீ பரவி கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.
இதனால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. ஏற்கெனவே வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி மான்கள், காட்டு மாடுகள் நகரப் பகுதிக்குள் நுழைகின்றன. இந்த ந்த காட்டுத் தீயை அணைக்க தேனி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.