மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)கீதா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா,  கும்பகோணம்  சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூர்ணிமா, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன், பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் மற்றும்  வட்டாட்சியர்கள்,  அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.