தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், கிண்டி அருகே உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது வாக்கினை செலுத்தினார்.