நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 162-பூம்புகார்,172-பாபநாசம், 160-சீர்காழி, 161-மயிலாடுதுறை, 171- கும்பகோணம் ,170- திருவிடைமருதூர்  6 ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி, தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே, வேட்பாளர்கள், முகவர்கள்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (20.04.2024) மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில்  உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுக்காப்பு திட்டம்) கீதா ஆகியோர் உடனிருந்தனர்.