தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேலுர் மாவட்டம் காட்பாடி தொகுதி காந்திநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டடுள்ள நிலையில்  வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.