மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள காவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்குசாவடி வாரியாக தேர்தல் பணி ஓதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி தலைமையில் தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) ஜன்மே ஜெயா பி கயிலாஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.