மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் நூறு சதவீகிதம் வாக்குபதிவினை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள், நியாயவிலை கடை பணியாளர்கள் , மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில்  கூட்டுறவு சங்கங்களின் மண்டல  இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ் , மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் ஆகியோர் இருந்தனர்.