மயிலாடுதுறையில் கடந்த ஒன்பது நாட்களாக சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் அதனை உறுதி செய்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை பொதுமக்கள் இனி சிறுத்தை குறித்து அச்சப்பட வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.