மயிலாடுதுறையில் தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2824 வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் தபால் வாக்கு வசதியை பயன்படுத்தி வாக்களித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதிர்வரும் 19.4.2024 அன்று நடைபெற உள்ளது. 4.6.2024 அன்று பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 133264 ஆண் வாக்காளர்களும், 137454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 129763 ஆண் வாக்காளர்களும், 132931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 130162 ஆண்
வாக்காளர்களும், 137298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 127410 ஆண் வாக்காளர்களும், 133268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 28.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதனையொட்டி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குப்பதிவு பெற சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மொத்தம் 70 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் கடந்த 05.04.2024, 06.04.2024 மற்றும் 08.04.2024 ஆகிய 3 நாட்கள் வரை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று தபால் வாக்கு படிவத்தை வழங்கி தபால் வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.

அதன்படி 28.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 320 வாக்காளர்களும், 294 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களும், 161.மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 253 வாக்காளர்களும், 189 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 283 வாக்காளர்களும், 178 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 297 வாக்காளர்களும், 121
மாற்றுத்திறனுடைய வாக்காளர்களும் , கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 374 வாக்காளர்களும், 176 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களும், 172.பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 221 வாக்காளர்களும், 118 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களும் என மொத்தம் 2824 வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால்
வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி தபால் வாக்கு செலுத்தி இத்தேர்தலில் தங்களது ஓட்டினை பதிவு செய்துள்ளனர் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.