நாகப்பட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும், மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பதவி வகித்தவர் எம்.பி செல்வராஜ் (வயது 67). இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (13.05.2024) காலை காலமானார்.
மறைந்த எம்.பி செல்வராஜ் கடந்த 1989,1996,1998 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.